Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி இப்போது இதையெல்லாம் தவிர்க்க வேண்டும்.. நண்பர் டிவில்லியர்ஸ் அறிவுரை!

vinoth
செவ்வாய், 7 ஜனவரி 2025 (09:14 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரை இழந்துள்ளது. இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஏமாற்றினார்.

கோலி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளில்தான் இந்த சீரிஸ் முழுவதும் அதிகமுறை அவுட் ஆகி  வெளியேறினார். ஆனால் அந்த பந்துகளை விட்டு கூடுதல் ரன்களை சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர் முன்னாள் வீரர்கள். ஆனால் கோலி பிடிவாதமாக அந்த பந்துகளை ஆடி விக்கெட்டை இழந்து வருகிறார் என்பதுதான் சோகம்.

அது மட்டுமில்லாமல் இந்த தொடரில் கோலி ஆஸி வீரர்களிடமும் ரசிகர்களிடம் ஆக்ரோஷமான மோதல்களில் ஈடுபட்டார். இது குறித்து பேசியுள்ள கோலியின் நெருங்கிய நண்பர் டிவில்லியர்ஸ் “கோலி சண்டை போடுவது எனக்குப் பிடிக்கும். ஆனால் அவர் தன் வாழ்வின் மோசமான ஃபார்மில் இருக்கும்போது இப்போது இதெல்லாம் தேவையில்லாதது எனத் தோன்றுகிறது. அவர் இப்போது இதையெல்லாம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ்: யுவராஜ் சிங் கேப்டன்.. முதல் போட்டியே பாகிஸ்தானுக்கு எதிராகவா?

சுப்மன் கில் அபார இரட்டை சதம்.. இந்திய பவுலர்கள் அசத்தல்.. இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் ஸ்கோர் விபரம்..!

ஜடேஜா அவுட்.. இரட்டை சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. 2வது டெஸ்ட்டின் ஸ்கோர் விபரம்..!

பாகிஸ்தான் அணி இந்தியா வந்து விளையாட மத்திய அரசு அனுமதி.. 3 துறைகள் அளித்த ஒப்புதல்..!

இன்னும் 18 ரன்கள் தான்.. சுப்மன் கில் நிகழ்த்த இருக்கும் சாதனை.. ஜடேஜா அதிவேக அரைசதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments