Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி இடத்தில் நிதீஷ்குமார் இறங்க வேண்டும்… பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கருத்து!

vinoth
வியாழன், 2 ஜனவரி 2025 (07:28 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ஒரு டி 20 போன்ற பரபரப்புடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியில் வென்றதன் மூலம் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை ஆஸ்திரேலியா 10 ஆண்டுகளுக்குப் பிறகு கைப்பற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.

இந்த தோல்விக்கு இந்திய அணியின் மூத்த பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டம்தான் முக்கியக் காரணம் என்பது மறுக்க முடியாது. அதிலும் ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். இந்நிலையில் போட்டி முடிந்ததும் பேசிய கேப்டன் ரோஹித் ஷர்மா தன்னுடைய பேட்டிங் திருப்திகரமாக இல்லை என்று கூறியுள்ளார். இந்நிலையில் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் ஓய்வு பெறவேண்டுமென ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பசித் அலி “கோலி இடத்தில் நிதீஷ் குமாரை இறக்க வேண்டும். கோலி ஐந்தாவது பேட்ஸ்மேனாக வர வேண்டும். கோலியால் ரன் சேர்க்க முடியவில்லை என்றால் கீழே இறங்கிதான் ஆடவேண்டும். அதைதான் ரோஹித் ஷர்மா செய்தார். ஆனால் இதைப் பற்றி யாரும் பேசுவதில்லை. அதற்குக் காரணம் எல்லோருக்கும் இருக்கும் பயம்தான் என தோன்றுகிறது” எனப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments