மற்ற அணிகள் என்னை விலை பேசினார்கள்!?? – கோலி பகிர்ந்த தகவல்!

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (16:03 IST)
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியில் விளையாடும் தன்னை மற்ற அணிகள் அழைத்ததாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்திய ப்ரீமியர் லீக் டி 20 போட்டிகள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே மட்டுமல்லாது உலக கிரிக்கெட் ரசிகர்களிடையேயும் மிகவும் பிரபலமானவை. இதுவரை 8 அணிகள் விளையாடி வந்த நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஐபிஎல் தொடங்கியது முதலாகவே விராட் கோலி ஆர்சிபி அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். இதுநாள் வரை ஆர்சிபி அணியின் கேப்டனாக பதவி வகித்த கோலி தற்போது அந்த பதவியிலிருந்து விலகியுள்ளார். எனினும் தான் தொடர்ந்து ஆர்சிபி அணிக்காக விளையாடுவேன் என அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய விராட் கோலி “ஐபிஎல் ஏல பட்டியலில் இடம்பெற மற்ற அணிகள் என்னை தொடர்பு கொண்டு பேசினார்கள். கடைசியாக ஐபிஎல் தொடரை வென்று விட்டாய் என 5 பேர் பேசுவதை விட ஆர்சிபி அணிக்கு விசுவாசமாக இருப்பதே சிறந்தது” என்று கூறியுள்ளார். இதுவரை நடந்த 14 ஐபிஎல் தொடரிலும் ஒரே அணிக்காக விளையாடியவர் என்ற சாதனையும், இதுவரை வீரர்களின் ஏல பட்டியலுக்குள் வராத வீரர் என்ற சாதனையும் கோலி படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

ஐபிஎல் மினி ஏலம்: 350 வீரர்களுடன் இறுதிப் பட்டியல் வெளியீடு!

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஷுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர்: மாற்றம் ஏன்? சூர்யகுமார் விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments