Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிசிசிஐ விதித்த கட்டுபாடுகளால்தான் கோலி சீக்கிரம் ஓய்வை அறிவித்தாரா?

vinoth
செவ்வாய், 13 மே 2025 (13:46 IST)
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராகவும், ஏராளமான ரசிகர்களையும் கொண்டவராக இருப்பவர் விராட் கோலி. ரசிகர்களால் ‘கிங்’ கோலி என்று அழைக்கப்படும் விராட் கோலி இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகை விளையாட்டுகளிலும் பல சாதனைகளை படைத்துள்ளார்.

சமீபத்தில் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. எதிர்பார்த்தது போலவே இன்று அவர் தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியான ஒன்றாக அமைந்துள்ள்ளது. கோலியின் இந்த திடீர் அறிவிப்புக்கு என்ன காரணம் என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் பிசிசிஐ வீரர்களுக்குப் பல கட்டுப்பாட்டு விதிகளை அறிவித்தது.இந்த விதிகளில் பெரும்பாலானவை கோலியை மனதில் வைத்தே  உருவாக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. அது சம்மந்தமாக கோலி அதிருப்தியைத் தெரிவித்ததாக சொல்லப்பட்டது. குறிப்பாக வெளிநாட்டு தொடர்களின் போது குடும்பத்தினரை அழைத்துச் செல்ல விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைக் கோலி விரும்பவில்லை என சொல்லப்படுகிறது. ஆனால் பிசிசிஐ அதற்கு செவி சாய்க்காததால் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி சச்சினின் அந்த சாதனையை முறியடிக்க முடியாதே… கோலி ஓய்வால் ரசிகர்கள் சோகம்!

விராட் கோலி இங்கிலாந்து தொடரில் விளையாட ஆசைப்பட்டார்… பயிற்சியாளர் பகிர்ந்த கருத்து!

மே 17 முதல் மீண்டும் ஐபிஎல் தொடக்கம்.. முழு அட்டவணை இதோ..!

கோலியின் ஓய்வு முடிவைத் திரும்பப் பெற சொல்லி பிசிசிஐ கேட்கவில்லை.. வெளியான தகவல்!

சொன்னா சொன்னதுதான்..! டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments