இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராகவும், ஏராளமான ரசிகர்களையும் கொண்டவராக இருப்பவர் விராட் கோலி. ரசிகர்களால் கிங் கோலி என்று அழைக்கப்படும் விராட் கோலி இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகை விளையாட்டுகளிலும் பல சாதனைகளை படைத்துள்ளார்.
சமீபத்தில் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. எதிர்பார்த்தது போலவே இன்று அவர் தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியான ஒன்றாக அமைந்துள்ள்ளது. கோலியின் இந்த திடீர் அறிவிப்புக்கு என்ன காரணம் என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.
சர்வதேசக் கிரிக்கெட்டில் 100 சதங்கள் என்ற சச்சினின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்புள்ள ஒரே வீரராக தற்போது விராட் கோலி மட்டுமே இருந்து வருகிறார். தற்போது அவர் 82 சதங்கள் அடித்துள்ளார். சச்சினின் சாதனையை முறியடிக்க அவருக்கு இன்னும் 18 சதங்கள் தேவை. ஆனால் தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால் ஒரு நாள் போட்டிகளில் மட்டும் அவரால் இன்னும் 18 சதங்கள் அடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.