Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேப்டன் பொறுப்பில் இருந்து பதவி விலகினார் விராட் கோலி.

கேப்டன் பொறுப்பில் இருந்து பதவி விலகினார் விராட் கோலி.
, சனி, 15 ஜனவரி 2022 (20:18 IST)
இந்திய டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து பதவி விலகினார் விராட் கோலி.

இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின், தோனிக்குப் பிறகு அதிகளவில் ரசிகர்களைக் கவர்ந்தவர் விராட் கோலி. திறமையான பேட்ஸ்மேனான தொடர்ந்து ஜொலித்து வந்தவர் சமீபகாலமாக தோல்வியைச் சந்தித்தார்.

தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் அவர் தலைமையிலான இந்திய அணி தொடரை இழந்துள்ளது. இ ந் நிலையில் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். இது ரசிகர்ளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர் தலைமையில், 7 ஆண்டுகளில்  இந்திய அணி 68 போட்டிகளில் 40 வெற்றிகள் பெற்றுள்ளது. இதில் அவர் 5,864 ரன்கள் எடுத்துள்ளார்.

இதுகுறித்து கோலி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கேப்டனாக  பொறுப்பேற்று 7  ஆண்டுகள் நிறைவடைந்துள்ளடது.   கடின இழைப்பு மற்றும் நம்பிக்கையை எப்போதும் இழந்ததில்லை இந்த வாய்ப்பைக் கொடுத்த பிசிசிஐக்கும், சக வீரர்கள், பயிற்சியாளர் ரசி சாஸ்திரிக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார். இதெல்லாவற்றிற்கும் மேலான எனக்கு கேப்டன் தகுதி இருப்பதைக் கண்டறிந்த தோனிக்கு என் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கோலி, டி-20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

188 ரன்கள்க்குள் சுருண்ட இங்கிலாந்து… இந்த டெஸ்ட்டும் போச்சா?