Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சமரசம் செய்து கொள்ளாதவர் விராட் கோலி - சொல்கிறார் சச்சின்

சமரசம் செய்து கொள்ளாதவர் விராட் கோலி - சொல்கிறார் சச்சின்
, சனி, 28 மே 2016 (11:56 IST)
விராட் கோலி வெவ்வேறு வடிவ போட்டிகளிலும், தனது நுட்பமான ஆட்டத்தில் எப்போதும் சமரசம் செய்துகொள்ளாமல் விளையாடுபவர் என்று மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
 

 
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனுமான விராட் கோலி கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் படைத்து வருகிறார். அனைத்து வடிவ ஆட்டங்களிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் சிறந்த இடத்தைப் பிடித்துள்ளார்.
 
இந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலி, 15 போட்டிகளில் விளையாடி [4 சதங்கள் மற்றும் 6 அரைச்சதங்கள்] 919 ஓட்டங்களை குவித்துள்ளார். இது தவிர, 78 பவுண்டரிகளும், 36 சிக்ஸர்களும் குவித்துள்ளார்.
 
இந்நிலையில் விராட் கோலி பற்றி கூறியுள்ள சச்சின் டெண்டுல்கர், ”விராட் கோலி பந்தை நேராக எதிர்கொண்டு ஒரு சிறந்த கிரிக்கெட் ஷாட்களை ஆடி ரன்கள் குவித்து வருகிறார். விராட் சிறப்புத் தன்மை வாய்ந்தவர். அவர் தனது ஆட்டத்திற்காக கடுமையாக உழைக்கிறார். ஒழுக்கத்திலும், அர்ப்பணிப்பிலும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறார்.
 
வேறு வேறு வடிவிலான கிரிக்கெட் ஆட்டங்களிலும், தனது பேட்டிங் நுட்பத்தில் ஒருபோதும், சமரசம் செய்து கொள்ள மாட்டார். மேலும் மனோதிடத்தில் உறுதி மிக்கவர். நெருக்கடியான நேரத்திலும்கூட சிறப்பாக செயல்படுகிறார்” என்று கூறியுள்ளார்.
 
மேலும், ஒருவரின் உண்மையான தனித்திறமையை டெஸ்ட் கிரிக்கெட்தான் காட்டும் என்று நம்புகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் பவுலர்களுக்கு சாதகமாக விக்கெட்டுகள் அமைக்க உதவுகிறது. மற்ற வடிவ போட்டிகளில், பெரிய அளவிலேயே பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் இருவருக்கும் சமமான அளவு பங்கு இருப்பதாக நினைக்கிறேன்.
 
எந்த கிரிக்கெட் வீரருக்கும் டெஸ்ட் கிரிக்கெட்தான் தொடர்ந்து சவால் அளிக்கும் விஷயம் ஆகும். இந்த காரணத்தினாலேயே அது டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில்தான் ஒரு வீரரின் திறமை, மனக்கட்டுப்பாடு, செயல்திறன் மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றை காட்டுகிறது” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோலிக்கு பந்து வீசுவது கவலையளிக்கும் விஷயம் - வாசிம் அக்ரம் ஒப்புதல்