உங்கள நினைச்சா சிரிப்பு தான் வருது: விராட் கோலி கிண்டல்!

உங்கள நினைச்சா சிரிப்பு தான் வருது: விராட் கோலி கிண்டல்!

ஞாயிறு, 27 நவம்பர் 2016 (13:38 IST)
ராஜ்கோட்டில் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் போது இந்திய கேப்டன் விராட் கோலி பந்தை சேதப்படுத்தியதாக இங்கிலாந்து பத்திரிகைகள் குற்றம் சாட்டின.


 
 
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி சமனில் முடிந்த நிலையில் இரண்டாவது போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது.
 
இதனை தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய கேப்டன் கோலி பந்தை சேதப்படுத்தியதாக இங்கிலாந்து பத்திரிகைகள் குற்றம் சாட்டின. இதற்கு பதில் அளித்த இந்திய கேப்டன் விராட் கோலி கூலாகா பதிலளித்தார்.
 
நான் பந்தை சேதப்படுத்தியதாக 5 நாட்கள் கழித்து இங்கிலாந்து பத்திரிகைகள் செய்தி வெளியிட்டதை கேள்விப்பட்டதும் எனக்கும் கோபம் வரவில்லை, சிரிப்பு தான் வந்தது என விராட் கோலி கூறினார். மேலும் இந்த புகாரை பெரிதாக எடுத்துக்கொள்ள போவதில்லை மொகாலி டெஸ்டில் வெற்றி பெறுவதிலேயே முழுக்கவனமும் இருக்கும் என அவர் பதிலளித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் அப்பாவாகவும் சிறந்து விளங்கும் டோனி!! (வீடியோ)