Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பந்தை பவுண்டரி அடித்துவிட்டு கோலி சொன்ன வார்த்தை – ஸாம்பா பகிர்ந்த ரகசியம்!

பந்தை பவுண்டரி அடித்துவிட்டு கோலி சொன்ன வார்த்தை – ஸாம்பா பகிர்ந்த ரகசியம்!
, திங்கள், 23 நவம்பர் 2020 (11:10 IST)
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டிவிட்டரில் அனைத்தையும் படிப்பார் எனத் தெரிவித்துள்ளார் ஆடம் ஸாம்பா.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவில் முகாமிட்டு தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு இப்போது பயிற்சியை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய சுழல்பந்து வீச்சாளர் ஸாம்பா ‘கோலி டிவிட்டரில் எல்லாவற்றையும் படிப்பார். என் முதல் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணிக்கு எதிராக நான் விளையாடிய போது என் பந்தில் அவர் பவுண்டரி அடித்தார். அப்போது என் அருகில் வந்து டிவிட்டரில் இருந்து விலகியிருங்கள் நண்பா எனக் கூறினார். அப்போது நான் அதிகமாக டிவிட்டரில் இயங்கி வந்தேன். அதை எல்லாம் அவர் படித்துள்ளாரா என்ற ஆச்சர்யம் எழுந்தது.’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சச்சின் சாதனை தகர்ப்பு – கோலியின் கிரீடத்தில் மேலும் ஒரு சிகரம்!