Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சர்ச்சை வீடியோ… ஹோட்டல் நிர்வாகத்தின் மீது புகாரா?... கோலியின் முடிவு!

Advertiesment
சர்ச்சை வீடியோ… ஹோட்டல் நிர்வாகத்தின் மீது புகாரா?... கோலியின் முடிவு!
, புதன், 2 நவம்பர் 2022 (09:13 IST)
கோலியின் அறையை வீடியோ எடுத்து ரசிகர் ஒருவர் சமூகவலைதளத்தில் பகிர்ந்ததது சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

சில தினங்களுக்கு முன்னர் இந்திய அணியின்  வீரர் கோலியின் ஓட்டல் அறையை வீடியோ எடுத்து ரசிகர் ஒருவர் சமூகவலைதளங்களில் பரப்பினார். அதைப் பார்த்து அதிருப்தி அடைந்த கோலி இன்ஸ்டாகிராமில் “ஒவ்வொரு ரசிகருக்கும் அவரின் ஆஸ்தான வீரரைக் காணவேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஆனால் அதற்காக என்னுடைய தனிப்பட்ட பிரைவஸியை மீறலாமா?” என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவும் இதைக் கடுமையாகக் கண்டித்தார்.

இதையடுத்து சம்மந்தப்பட்ட அந்த ஊழியரை ஹோட்டல் நிர்வாகம் வேலையை விட்டு நீக்கியது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பாக, கோலியிடம் சம்மந்தப்பட்ட ஹோட்டல் நிர்வாகம் மீது புகார் கொடுக்க விரும்புகிறீர்களா எனக் கேட்டபோது, கோலி அதை வேண்டாம் என பெருந்தன்மையாக நிராகரித்து விட்டதாக சொல்லப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாபர் ஆசம் சுய நலம் பிடித்தவர் – இந்திய வீரர் விமர்சனம்