Webdunia - Bharat's app for daily news and videos

Install App

17years of Runmachine: வரலாற்றில் இன்று… கோலி சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமான நாள்!

vinoth
திங்கள், 18 ஆகஸ்ட் 2025 (10:06 IST)
வரலாறு எப்போதும் தன்னுடைய கதாநாயகர்களைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கும். அப்படி சச்சினுக்குப் பிறகு அவர் போல ஒரு வீரர் வரவே முடியாது என நினைத்துக் கொண்டிருந்த போது இந்திய அணிக்கு வந்து சேர்ந்தார் கோலி. சச்சின் போல தொடர்ச்சியாக ரன் குவிக்கும் திறன் பெற்றிருந்த அவரை ரசிகர்கள் ‘ரன் மெஷின்’ என செல்லமாக அழைத்தனர்.

சச்சினிடம் இல்லாத ஆக்ரோஷம் கோலியிடம் இருந்தது. அதுவே அவரது தனித்தன்மையாகவும் அமைந்தது. அதே போல சச்சின் போல கேப்டன்சியில் கோலி தோல்வி பெறவில்லை. அவர் தலைமையில் இந்திய அணி தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாக இருந்தது. அதே போல ஐம்பது ஓவர் உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி வரை அணியை அழைத்துச் சென்றார்.

தற்போது டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட கோலி ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அவரது இலக்காக இருக்கக் கூடும் என தெரிகிறது. இந்நிலையில் கோலி சரவ்தேசப் போட்டிகளில் அறிமுகமாகி இன்றோடு 17 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். 2008 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தன்னுடைய 19 ஆவது வயதில் கோலி அறிமுகமானார். இந்த 17 ஆண்டுகளில் கோலி 27,599 சர்வதேச ரன்களை சேர்த்துள்ளார். அதில் 82 சதங்களும் 143 அரைசதங்களும் அடக்கம்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசியக் கோப்பை அணியில் ஷுப்மன் கில்லுக்கே இடமில்லையா?

ஆசியக் கோப்பை தொடர்… பாகிஸ்தான் அணியில் பாபர் ஆசாமுக்கு இடம் மறுப்பு!

சங்ககராவும் ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேறுகிறாரா?.. KKR – புதிய பொறுப்பு!

முறைப்படிதான் பிரேவிஸை வாங்கினோம்… அஸ்வினின் பேச்சை மறுத்த சிஎஸ்கே!

ரோஹித் ஷர்மாவிடம் பேசி இன்னும் ஐந்து ஆண்டுகள் விளையாட வைக்கவேண்டும்- யோக்ராஜ் சிங் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments