Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலிக்கு முன் இருவர் மட்டுமே இந்த சாதனையை புரிந்தவர்கள்!

Webdunia
சனி, 11 பிப்ரவரி 2017 (05:05 IST)
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி இரட்டைச் சதம் அடித்ததன் மூலம் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 687 குவித்துள்ளது.


 

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்திருந்தது. விராட் கோலி 111 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இந்நிலையில், நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளைக்குப் பின்னர் அற்புதமாக விளையாடிய விராட் கோலி இரட்டைச் சதத்தைப் பதிவு செய்தார். இதன் மூலம் தொடர்ச்சியாக 4 டெஸ்ட் தொடர்களில் இரட்டை சதத்தைப் பதிவு செய்த 3ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இதற்கு முன்னதாக ஆலன் பார்டர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் தொடர்ச்சியாக 4 தொடர்களில் இரட்டைச் சதத்தைப் பதிவு செய்திருந்தனர். பின்னர் 204 ரன்களில் கோலி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய விருத்திமான் சஹா சதம் விளாசினார்.

பின்னர், 6 விக்கெட் இழப்பிற்கு 687 ரன்கள் எடுத்திருந்த போது இந்திய அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அடுத்து களமிறங்கிய வங்கதேசம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் எடுத்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்.. இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!

புற்றுநோயை வென்றவர் யுவ்ராஜ் சிங்… ஆனால் அவரை உடல்தகுதியைக் காரணம் காட்டி நீக்கினார்கள்.. கோலியை குற்றம்சாட்டும் உத்தப்பா!

இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளாரா தோனி?

நான் இந்திய அணிக்குக் கேப்டன் ஆகாததற்கு இதுதான் காரணம்.. அஸ்வின் ஓபன் டாக்!

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ஆஸி அணியில் இடம்பெற மாட்டாரா பேட் கம்மின்ஸ்?

அடுத்த கட்டுரையில்
Show comments