Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொன்னா சொன்னதுதான்..! டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி!

Prasanth Karthick
திங்கள், 12 மே 2025 (12:28 IST)

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

 

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராகவும், ஏராளமான ரசிகர்களையும் கொண்டவராக இருக்கிறார் விராட் கோலி. ரசிகர்களால் ‘கிங்’ கோலி என்று அழைக்கப்படும் விராட் கோலி இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகை விளையாட்டுகளிலும் பல சாதனைகளை படைத்துள்ளார். 

 

சமீபத்தில் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. அவர் தற்போது ஓய்வை அறிவிப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என கிரிக்கெட் நிபுணர்கள் பேசி வந்த நிலையில், விராட் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என பிசிசிஐயும் பேசி வந்ததாக கூறப்பட்டது.

 

இந்நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக தனது ஓய்வை அறிவித்துள்ளார் விராட் கோலி. டெஸ்ட்டில் தனது 14 ஆண்டுகால பயணம் முடிவுக்கு வருவதாக அவர் உருக்கமாக தெரிவித்துள்ள நிலையில் அவரது ரசிகர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்சிபி வீரர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்.. பெண் கொடுத்த புகாரால் பரபரப்பு..!

ஸ்மிருதி மந்தனா அபார சதம்.. 97 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா..!

சச்சின், கோலிக்கு இணையான மரியாதையை பும்ராவுக்குக் கொடுக்கவேண்டும் –அஸ்வின் கருத்து!

பும்ரா இல்லாவிட்டால் இரண்டாவது டெஸ்ட்டிலும் தோல்விதான்… ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

அமெரிக்காவில் சி எஸ் கே நிர்வாகிகளோடு சஞ்சு சாம்சன் சந்திப்பு… அப்ப உண்மதான் போலயே!

அடுத்த கட்டுரையில்
Show comments