”ஒரு அணியாக இணைந்து இன்னும் விளையாடவில்லை”.. விராட் கோலி கருத்து

புதன், 21 ஆகஸ்ட் 2019 (10:49 IST)
இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடவுள்ள நிலையில் நிரூபர்களுக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளை குறித்து பேட்டியளித்துள்ளார்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் போட்டியில் இந்திய அணி களமிறங்கவுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, நிரூபர்களுக்கு பேட்டியளித்தார்.

அந்த பேட்டியில் அவர், “டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் மிகவும் கடினமான ஒன்று. சரியான தருணத்தில் தான் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது” என கூறினார்.

”டெஸ்ட் போட்டிகளில் சுவாரஸியம் இல்லை என ரசிகர்கள் எண்ணுகிறர்கள், ஆனால் அது உண்மையல்ல, போட்டிகளின் தரம் 2 ஆண்டுகளில் உயர்ந்துள்ளது” எனவும் கூறினார். தனி தனியாக வீரர்கள் சிறப்பாக ஆடினாலும், நாங்கள் ஓர் அணியாக இணைந்து சிறப்பான முறையில் இன்னமும் விளையாடவில்லை” எனவும் அந்த பேட்டியில் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த போட்டிகளில் ஒவ்வொறு முடிவும் அணியின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும். இதனால் பேட்டிங் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என விராத் கோலி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் சோபிக்காத ஆஃப் ஸ்பின் – மிதவேகத்துக்கு மாறிய மொயின் அலி !