Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்த குடும்பமே ஆதரிக்கல.. சிஎஸ்கேவை தோற்கடிக்க காரணம் இதுதானா? – வருண் சக்ரவர்த்தி!

Webdunia
செவ்வாய், 16 மே 2023 (13:37 IST)
கடந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கேவை வென்று தன் குடும்பத்தை மொக்கை செய்தது மகிழ்ச்சியாக இருந்ததாக கொல்கத்தா அணி வீரர் வருண் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா அணிகள் மோதிக் கொண்ட நிலையில் சென்னை அணியை கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அன்றைய போட்டியில் சென்னை அணி வென்றிருந்தால் முதல் அணியாக ப்ளே ஆப்க்கு தகுதி பெற்றிருக்கும்.

வெற்றி பெற்ற கொல்கத்தா அணியில் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி விளையாடி வருகிறார். இந்நிலையில் இந்த வெற்றிக்கு பின் பேசிய வருண் “சென்னை – கொல்கத்தா போட்டியை காண என் குடும்பத்திலிருந்து 20 பேர் வந்திருந்தார்கள். யாருமே நான் இருக்கும் கொல்கத்தா அணியை சப்போர்ட் செய்யவில்லை. எல்லாருமே சிஎஸ்கேவை சப்போர்ட் செய்தார்கள். சென்னை அணியை வென்று அவர்களுக்கு மொக்கை கொடுத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று ஜாலியாக பதிலளித்துள்ளார்.

அன்றைய போட்டியில் பந்து வீசி ருதுராஜ் கெய்க்வாட், ரஹானே உள்ளிட்ட சென்னை ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை வீழ்த்திய வருண் சக்ரவர்த்தி, ஜடேஜாவின் பந்தையும் கேட்ச் பிடித்து அவுட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாயகன் மீண்டும் வறார்.. மீண்டும் CSK கேப்டனாகும் தல தோனி!? - நாளைக்கு இருக்கு சம்பவம்!

ரிஷப் பண்ட்டும் லக்னோ அணிக் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகலாம்.. சமூகவலைதளத்தில் பரவும் கருத்துகள்!

ரஹானேவுடனான மோதல்.. மும்பை அணியை விட்டு கோவாவுக்கு செல்லும் ஜெய்ஸ்வால்!

தோனி எனது கிரிக்கெட் தந்தை.. பேபி மலிங்கா பதிரனா நெகிழ்ச்சி!

போன வாரம் 250 ரன் அடிச்சோம்.. ஆனா அடுத்தடுத்து மூன்று தோல்விகள்- பாட் கம்மின்ஸ் வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments