Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா பாகிஸ்தான் தொடர் இனி நடக்கவே நடக்காது என்பது கசப்பான உண்மை- உஸ்மான் கவாஜா வருத்தம்!

Webdunia
திங்கள், 27 செப்டம்பர் 2021 (18:11 IST)
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இரு நாட்டு தொடர் நடந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.

பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானில் சென்று கிரிக்கெட் விளையாட எந்த வொரு அணியும் முன்வருவதில்லை. 10 ஆண்டு காலமாக துபாயில்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் போட்டிகள் நடந்து வருகின்றன. இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் சென்ற போது அவர்களின் பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதே இதற்குக் காரணம்.

மேலும் அரசியல் காரணங்களால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஐசிசி தொடர் தவிர பைலேட்டரல் தொடரில் விளையாடுவதே இல்லை. இதுகுறித்து பேசியுள்ள ஆஸி அணியின் உஸ்மான் கவாஜா ‘ இந்தியா மற்றும் பாகிஸ்தான் தொடர்களை நான் ரொம்பவே ரசித்து பார்த்தேன். அது இப்போது நடக்காமல் இருப்பது எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு நாடுகளையும் இணைக்கும் ஒரே விஷயம் கிரிக்கெட்தான். இது தொடர்பாக நான் ஐசிசியிடம் பேசியுள்ளேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சர்வதேச சிலம்பப் போட்டியில் பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள், வீராங்கனைகள்!

ப்ளாங்க் செக்லாம் வேணாம்.. பிசிசிஐ பயிற்சியாளராகும் கவுதம் கம்பீர்?

இன்னும் அமெரிக்கா செல்லாத கோலி… வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் விளையாடுவாரா?

ஐபிஎல் வர்ணனையின் போது ராயுடுவை ‘ஜோக்கர்’ என கேலி செய்த பீட்டர்சன்.. ஓ இதுதான் காரணமா?

ஸ்ரேயாஸ்தான் இந்திய அணியின் எதிர்கால கேப்டனா?... சமூகவலைதளங்களில் ரசிகர்கள் விவாதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments