Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நியுசிலாந்து அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த எமிரேட்ஸ் அணி!

Advertiesment
நியுசிலாந்து அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த எமிரேட்ஸ் அணி!
, ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2023 (08:48 IST)
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நியுசிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. ஆனால் அந்த அணியில் பல மூத்த வீரர்கள் பலர் இடம்பெறவில்லை.

இந்நிலையில் நேற்று நடந்த முதல் டி 20 போட்டியில் நியுசிலாந்து அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியின் சாப்மேன் அதிகபட்சமாக 63 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் மட்டுமே சேர்த்தது. எமிரேட்ஸ் அணியின் ஆயான் கான் அதிகபட்சமாக 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.

இதன் பின்னர் ஆடிய எமிரேட்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் அதிரடியில் இறங்கினர். அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் முகமது வாசீம் 29 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்தார். அதிரடி ஆட்டத்தால் அந்த அணி 16 ஆவது ஓவரில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 143 ரன்கள் சேர்த்து வெற்றி இலக்கை எட்டியது. கத்துக்குட்டி அணியான எமிரேட்ஸ் நியுசிலாந்தை வென்றிருப்பது கிரிக்கெட் உலகில் கவனத்தைக் குவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் மும்பை அணியில் மலிங்கா… ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!