Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் சர்ச்சையால் எடுக்கப்பட்ட புதிய முடிவு… காயினுக்கு க்ளோஸ் அப்!

vinoth
வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (07:05 IST)
கடந்த 15 ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி கேப்டன் பாப் டூ ப்ளெசிஸ், சன்ரைசர்ஸ் கேப்டன் பேட் கமின்ஸிடம் மும்பை அணி டாஸ் மோசடி செய்ததாக செய்து காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 11ம் தேதி மும்பை இந்தியன்ஸ் – ஆர்சிபி அணிகள் இடையே போட்டி நடந்தபோது, மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா டாஸ் போட்டார். அவர் ஒரு மார்க்கமாக டாஸை பின்னால் போட அதை எடுத்த ஜவகல் ஸ்ரீநாத் மும்பைக்கு சாதகமாக டாஸ் வரும்படி டாஸ் காயினை திருப்பி எடுத்ததாக ஒரு வீடியோவும் வைரலானது. இது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையைக் கிளப்பியது.

இந்நிலையில் நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான டாஸின் போது டாஸ் காயினுக்கு நேரடியாக கேமரா க்ளோஸ் அப் வைக்கப்பட்டு டாஸின் முடிவு ரசிகர்களுக்கு தெரியும்படி காட்டப்பட்டது. ஐபிஎல் தொடரில் முதல் முறையாக டாஸ் காயின் நேரடியாக ரசிகர்களுக்கு காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

U19 மகளிர் டி20 உலகக் கோப்பை.. இந்தியா சாம்பியன்..!

அதிரடி காட்டிய திரிஷா! 82 ரன்களில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா! - கலகலக்கும் ஜூனியர் பெண்கள் டி20 இறுதிப்போட்டி!

சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது! அஸ்வின், பும்ராவுக்கும் சிறப்பு விருது!

சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகள் எவை? - ரவி சாஸ்திரி, ரிக்கி பாண்டிங் கணிப்பு!

இங்கிலாந்துக்கு சான்ஸ் கிடைச்சா இந்தியா செஞ்சதையே செஞ்சிருப்பாங்க! - மைக்கெல் வாகன்!

அடுத்த கட்டுரையில்
Show comments