Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஸ்வின், ஜடேஜா எனக்கு ஒருவிதத்தில் உதவினர்… இங்கிலாந்து ஸ்பின்னர் டாம் ஹார்ட்லி கருத்து!

அஸ்வின், ஜடேஜா எனக்கு ஒருவிதத்தில் உதவினர்… இங்கிலாந்து ஸ்பின்னர் டாம் ஹார்ட்லி கருத்து!

vinoth

, திங்கள், 29 ஜனவரி 2024 (07:26 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஹைதராபாத்தில் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் இந்திய அணைக்கு 231 ரன்கள் இலக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி முதலாவது இன்னிங்சில் 246 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாவது இன்னிங்சில் 420 ரன்கள் எடுத்தது.

இந்தியா முதல் இன்னிங்சில் 436 ரன்கள் எடுத்த நிலையில் அந்த அணிக்கு 231 இலக்காக கொடுக்கப்பட்டுள்ளது. முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய இந்திய பேட்ஸ்மேன்கள் இரண்டாவது இன்னிங்ஸில் காலைவாரி சொதப்பினர்.

இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசி 7 விக்கெட்களை வீழ்த்தினார் அறிமுகப் போட்டியில் விளையாடிய டாம் ஹார்ட்லி. போட்டி முடிந்த பின்னர் பேசிய அவர் “முதல் இன்னிங்ஸில் பந்து சரியாக சுழலவில்லை. அதனால் என்னால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. எனவே ஜடேஜா மற்றும் அஸ்வின் வேகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வீசியதை பார்த்து நானும் லைன் மற்றும் லென்த்தை மாற்றினேன். அதனால் அஸ்வின் மற்றும் ஜடேஜா அவர்களுக்கே தெரியாமல் இங்கிலாந்தின் வெற்றிக்கு உதவி செய்துள்ளனர்.” எனக் கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி.. இந்தியா போராடி தோல்வி..!