Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?

Webdunia
வியாழன், 25 ஏப்ரல் 2024 (10:30 IST)
ஐபிஎல் தொடரின் 17 ஆவது சீசன் கடந்த மாதம் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை அனைத்து அணிகளும் 7 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளன. இப்போது லீக் சுற்றின் இரண்டாவது பாதி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதுவரையிலான போட்டிகளின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன.

இந்நிலையில் இன்று ஐதராபாத்தின் ராஜீவ்காந்தி மைதானத்தில் நடக்கும் 41 ஆவது போட்டியில் பெங்களூர் அணி ஐதராபாத் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இந்த சீசனில் காட்டடி அடித்து 250 க்கு மேல் மூன்று முறை அடித்து அசுர பார்மில் உள்ளனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர். அதனால் அவர்களை எதிர்கொள்ளவே எதிரணி பவுலர்கள் பீதியில் உள்ளனர். இந்நிலையில் இந்த சீசனில் இதுவரை ஒரே ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ள பெங்களூர் அணி அவர்களை எப்படி எதிர்கொள்ள போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆர் சி பி அணியில் வலுவான பேட்டிங் இருந்தாலும் பவுலர்கள் தொடர்ந்து சொதப்புவதால் அந்த அணியால் போட்டிகளை வெற்றிகரமாக முடிக்க முடியவில்லை. தொடர் தோல்விகளில் இருந்து இன்றாவது ஆர் சி பி மீளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ருத்துராஜைக் கழட்டிவிட முடிவெடுத்துள்ளதா சிஎஸ்கே?… சஞ்சு சாம்சனால் கிளம்பும் சர்ச்சை!

டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு.. பும்ரா, தாக்கூர் சாய் சுதர்சன் வெளியே… இந்திய அணியில் அதிரடி மாற்றம்!

ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டி… தேதி பற்றி வெளியான தகவல்!

மீண்டும் வருகிறது சாம்பியன்ஸ் லீக் டி 20 தொடர்… ஆனா பேரு மட்டும் வேற!

73 ரன்கள் எடுத்தால் போதும்.. இன்றைய போட்டியில் புதிய சாதனை படைப்பாரா ஜோ ரூட்?

அடுத்த கட்டுரையில்
Show comments