Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முத்தரப்பு ஐந்தாவது டி20 போட்டி: இந்தியா-வங்காளதேசம் மீண்டும் பலப்பரீட்சை

முத்தரப்பு ஐந்தாவது டி20 போட்டி: இந்தியா-வங்காளதேசம் மீண்டும் பலப்பரீட்சை
, புதன், 14 மார்ச் 2018 (10:50 IST)
இந்தியா- வங்காளதேச அணிகள் மீண்டும் மோதும் டி20 போட்டி இன்று இலங்கை கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெறுகிறது.
 
இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 அணிகள் பங்ககேற்கும் முத்தரப்பு டி20 போட்டி  கடந்த 6ம் தேதி இலங்கையில் தொடங்கியது.
 
முதல் போட்டி இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடந்தது. அந்த போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையே நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.மூன்றவது போட்டி இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையே நடந்தது. அந்த போட்டியில் வங்காளதேச அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி. நான்காவது போட்டி இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இந்நிலையில் வங்காளதேசம் - இந்தியா மோதும் ஐந்தாவது முத்தரப்பு டி20 போட்டி இன்று 7.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்திய அணி ஏற்கனவே வங்காளதேச அணியை 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இரண்டாவது டி20 போட்டியில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிசிசிஐ வெளியிட்ட ஐபிஎல் 2018 பாடல்