Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாடம் நடத்துபவர் மட்டும் டீச்சரல்ல!? – சச்சின் டெண்டுல்கரின் ட்விட்டர் பதிவு

Webdunia
வியாழன், 5 செப்டம்பர் 2019 (11:25 IST)
இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பல பிரபலங்களும் தங்களுக்கு பிடித்தமான ஆசிரியர்கள் குறித்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும் தனக்கு பிடித்த ஆசிரியர் குறிந்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

சிறு வயதில் கிரிக்கெட்டின் மீது சச்சினுக்கு ஆர்வம் ஏற்பட்டபோது, அவருக்கு கிரிக்கெட்டை முறையாக விளையாட கற்றுக்கொடுத்து, பல்வேறு நுட்பங்களை சொல்லி தந்து அவரை ஜாம்பவனாக மாறும் அளவுக்கு வழிநடத்தியவர் ராமகண்ட் அச்ரேகர். இதை நிறைய பேட்டிகளில் சச்சினே சொல்லியுள்ளார்.

இந்நிலையில் அச்ரேகர் தனக்கு பயிற்சியளிக்கும் பழைய புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டரில் பதிவிட்ட சச்சின் “ஆசிரியர்கள் பாடம் நடத்துபவர்கள் மட்டுமல்ல நமக்கான மதிப்பை உருவாக்குபவர்கள். அச்ஹ்ரேகர் சார் எனக்கு பெரும் முன்மாதிரியாக இருந்தார் விளையாட்டு களத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலும்! என் வாழ்க்கையில் அவருடைய பங்களிப்பு என்றும் இருக்கிறது. அவருடைய பாடங்கள் இன்றும் என்னை வழிநடத்துகின்றன” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொட்டித் தீர்த்த் மழை… மழை காரணமாக கைவிடப்பட்ட முதல் நாள் ஆட்டம்…!

மழையால் பாதிக்கப்பட்ட பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி!

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு.. ஆஸி நிதான ஆட்டம்!

காபா மைதானத்தைப் பார்த்து நாங்கள் பயப்படமாட்டோம்… ஷுப்மன் கில் தடாலடி!

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக நடக்கப் போகும் இரண்டு மாற்றங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments