காதலியின் மரணத்தால் அதிர்ச்சியடைந்த தோனி - சொல்லப்படாத பக்கங்கள்

வெள்ளி, 15 ஜூலை 2016 (12:06 IST)
இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது காதலியின் மரணத்தால், அதிர்ச்சியடைந்த சம்பவம் அவரை பற்றிய வாழ்க்கை வரலாற்று திரைப்படமான “M.S Dhoni: The Untold Story” என்ற திரைப்படத்தில் இடம்பெறவுள்ளது.
 

 
கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை புரிந்தவர் மகேந்திர சிங் தோனி. அதோடு, இந்திய கிரிக்கெட்டிற்கு வெற்றிகரமான கேப்டனாகவும், விக்கெட் கீப்பராக சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். இன்றைய இளம் வீரர்களுக்கு சிறந்த முன்மாதிரியாகவும் திகழ்ந்து வருபவர் தோனி.
 
மேற்சொன்னவை எல்லாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால், அவரைப் பற்றி தெரியாத, யாரும் அறிந்திராத ஒரு விஷயம் தற்போது வெளிவந்துள்ளது.
 
அவருக்கு அப்போது வயது 20. அந்த சமயத்தில் இந்திய அணிக்குள் நுழைவது, தனது கனவாக தோனிக்கு இருந்தது. அதே நேரத்தில் பிரியங்கா ஜா [Priyanka Jha] என்ற பெண்ணின் மீது காதல் ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில், 2003-04 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே மற்றும் கென்யாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய-’ஏ’ அணிக்கு தேர்வாகிறார். அதனைத் தொடர்ந்து இந்தியா-கென்யா-பாகிஸ்தான் இடையேயான முத்தரப்பு தொடரிலும் இடம்பெறுகிறார்.
 
தோனியின் காதலியாக நடிக்கும் தீஷா படானி
இவற்றையெல்லாம் சிறந்த முறையில் முடித்துவிட்டு தாயகம் திரும்பும்போதுதான் தோனிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அது தனது காதலி பிரியங்கா ஜா இறந்த செய்தி. இதனால், தோனி மனமுடைந்துள்ளார்.
 
ஆனால், இந்த துயரத்திலிருந்து திரும்பிய தோனி விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 123 பந்துகளில் 148 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார்.
 
பின்னர், கிரிக்கெட் பெரும் புகழடைந்த தோனி 2010ஆம் ஆண்டு சாக்‌ஷியை திருமணம் செய்து கொண்டார். இந்த தகவல்கள் அனைத்தும் அவரை பற்றிய வாழ்க்கை வரலாற்று திரைப்படமான “M.S Dhoni: The Untold Story” என்ற திரைப்படத்தில் இடம்பெறவுள்ளது.
 
இந்த திரைப்படத்தில் தோனியின் காதலியின் கதாபாத்திரத்தில், தீஷா படானி நடிக்க உள்ளார். தோனியின் மனைவி சாக்‌ஷி கதாபாத்திரத்தில் கியாரா அத்வானி நடிக்க உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் சென்னையில் போக்ஸ்வேகன் வென்டோ கோப்பை மோட்டார் ரேஸ்