Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த ஆண்டின் அதிக ரன் குவித்த ரன் மெஷின்! – கோலியை பின்னுக்கு தள்ளிய சுப்மன் கில்!

Advertiesment
Virat Kohli Shubman Ghill
, ஞாயிறு, 31 டிசம்பர் 2023 (15:15 IST)
இன்றுடன் இந்த ஆண்டு முடிவுக்கு வரும் நிலையில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.



இன்றுடன் 2023ம் ஆண்டு முடிவடைந்து 2024ம் ஆண்டு தொடங்க உள்ள நிலையில் புதிய ஆண்டை பலரும் வரவேற்க தயாராகியுள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்த முதல் வீரர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டில் மற்ற நாடுகளோடு இந்தியாவிற்கு இருந்த டூர் போட்டிகள் மட்டுமல்லாமல் உலகக்கோப்பை டெஸ்ட் கிரிக்கெட், உலகக்கோப்பை ஒருநாள் போட்டி, ஆசியக்கோப்பை என சர்வதேச போட்டிகள் விமரிசையாக நடந்தன. இதில் ஆசியக்கோப்பை போட்டிகளில் இலங்கை அணியை இந்திய அணி வெறும் 6 ஓவர்களில் 51 ரன்களை குவித்து வெற்றி பெற்றதெல்லாம் வரலாற்று தருணமாக அமைந்தது. உலக கோப்பை ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி கோப்பையை வென்றது.

இந்நிலையில் இந்திய அணிக்காக இந்த ஆண்டில் அனைத்து விதமான போட்டிகளிலும் பங்கேற்று அதிக ரன்கள் குவித்தவராக சுப்மன் கில் முதலிடத்தை பெற்றுள்ளார். மொத்தமாக 52 இன்னிங்ஸில் விளையாடியுள்ள அவர் 2,154 ரன்களை இந்திய அணிக்காக குவித்துள்ளார். அதற்கு அடுத்தப்படியாக 2,048 ரன்களுடன் விராட் கோலி இருக்கிறார். ஆனால் விராட் கோலி இந்த ரன்களை வெறும் 36 இன்னிங்ஸிலேயே குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உயரிய விருதுகளை நாடாளுமன்ற பாதையில் வைத்து சென்ற வினேஷ் போகத்!