Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிங்கம் எறங்குனா காட்டுக்கே விருந்து..! நேற்றைய போட்டியில் ‘தல’ தோனியின் புதிய சாதனை!

Advertiesment
சிங்கம் எறங்குனா காட்டுக்கே விருந்து..! நேற்றைய போட்டியில் ‘தல’ தோனியின் புதிய சாதனை!

Prasanth Karthick

, திங்கள், 1 ஏப்ரல் 2024 (10:03 IST)
நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்றாலும் கடைசியில் தோனி களத்தில் இறங்கியதில் தோல்வியை மறந்து மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர் ரசிகர்கள்.



நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையேயான போட்டியில் சிஎஸ்கே அணி எதிர்பாராத தோல்வியை தழுவியது. டெல்லி அணி 192 என்ற டார்கெட்டை வைத்த நிலையில் சிஎஸ்கே அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன், கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் வெறும் 1 ரன்னில் அவுட் ஆனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அடுத்தடுத்து ரச்சின் ரவீந்திரா, ஷிவம் துபே கூட குறைந்த ரன்னில் அவுட் ஆனார்கள். ரஹானே, மிட்செல் கொஞ்சம் தாக்கு பிடித்தார்கள். ஒருகட்டத்திற்கு மேல் இனி சிஎஸ்கேவுக்கு வெற்றிக்கு வாய்ப்பேயில்லை என்ற நிலையில் ரசிகர்கள் சோர்ந்து போனார்கள். அப்போது தோனி உள்ளே இறங்க பரபரப்பு பற்றிக் கொண்டது. அதற்கு ஏற்ப அதிரடி ஆட்டத்தை காட்டிய தோனி 16 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என விளாசி ரசிகர்களின் உற்சாக கோஷங்களுக்கு மத்தியில் போட்டியை முடித்து வைத்தார். 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோற்றிருந்தாலும் கடந்த 2 போட்டிகளில் தோனியை பேட்டிங்கில் காண முடியாத சோகம் இந்த போட்டியில் மறைந்தது ரசிகர்களுக்கு.


இந்த போட்டியில் தோனி விக்கெட் கீப்பராகவும் சாதனை படைத்துள்ளார். டி20 போட்டிகளில் விக்கெட் கீப்பராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் தோனி. 300 விக்கெட்டுகளை வீழ்த்தி தோனி முதல் இடத்தில் உள்ளார். 274 விக்கெட்டுகளுடன் கம்ரான் அக்மல் மற்றும் தினேஷ் கார்த்தி இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளனர். 270 விக்கெட்டுகளுடன் குயிண்டன் டி காக் 4வது இடத்திலும், 209 விக்கெட்டுகளுடன் ஜாஸ் பட்லர் 5வது இடத்திலும் உள்ளார்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டோம்… டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் பண்ட் கருத்து!