ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடியது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று நியூசிலாந்து அணியை தனது சொந்த மண்ணிலேயே ஆஸ்திரேலிய அணி வீழ்த்தி சாதனை படைத்தது.
டி20-ஐ தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
இந்த வெற்றியின் மூலம் ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் 117 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 122 புள்ளிகளுடன் இந்திய அணி முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.