Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் கேட்டுக்கொண்டதால் ஓய்வு முடிவை திரும்ப பெற்ற பங்களாதேஷ் கேப்டன்!

Webdunia
சனி, 8 ஜூலை 2023 (07:22 IST)
வங்கதேசத்தின் ODI கேப்டன் தமிம் இக்பால், இந்தியாவில் உலகக் கோப்பை தொடங்குவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். இதன் மூலம் தன்னுடைய 16 ஆண்டுகால சர்வதேச வாழ்க்கைக்கு திடீரென முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

வங்காளதேச அணி சமீபத்தில் நடந்த மூன்று ODIகளில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்ததற்கு பிறகு, இக்பால் ஏற்பாடு செய்திருந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் இந்த முடிவை அவர் அறிவித்துக் கொண்டிருக்கும் போதே கண்ணீர் விட்டு கலங்கினார். அவர் “என்னுடைய இறுதி கட்டத்துக்கு வந்துள்ளேன். என்னால் முடிந்த சிறந்ததை நான் கொடுத்தேன். நான் சர்வதேசக் கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசினாவை அவர் இல்லத்தில் சந்தித்த பிறகு தன்னுடைய ஓய்வு முடிவை திரும்பப் பெற்றுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “பிரதமர் என்னிடம் ஓய்வு முடிவை திரும்பப் பெற சொல்லி கேட்டுக்கொண்டார். நாட்டின் மிக முக்கியமான ஒருவர் சொல்லும்போது அதை மறுக்க முடியவில்லை. எனினும் 6 மாதங்கள் எனது சிகிச்சைக்காக ஓய்வை கேட்டுள்ளேன். சிகிச்சை முடிந்ததும் மீண்டும் கிரிக்கெட்டுக்கு வருவேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை! என்ன காரணம்?

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஊக்கத்தொகை… சமாதானப்படுத்த முயலும் ஐசிசி!

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments