Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஞ்சி கோப்பை தோல்விக்கு முழுக் காரணமும் கேப்டன் சாய் கிஷோர்தான் – தமிழக அணி பயிற்சியாளர் கோபம்!

vinoth
செவ்வாய், 5 மார்ச் 2024 (11:34 IST)
கடந்த சில மாதங்களாக ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்ற நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழ்நாடு அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றதை அடுத்து இந்த தொடரின் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அரையிறுதியில் தமிழக அணி மும்பை அணியிடம் பரிதாபமாக தோற்றது. இதற்கு டாஸ் வென்று முதலில் பந்துவீசாமல் பேட் செய்வதாக அறிவித்த கேப்டன் சாய் கிஷோரின் முடிவுதான் காரணம் என விமர்சனம் எழுந்தது.

இப்போது அதே கருத்டஹி தமிழக அணியின் பயிற்சியாளர் சுலக்‌ஷன் குல்கர்னியும் தெரிவித்துள்ளார். அவர் “ஒரு மும்பைக் காரனாக இந்த மைதானத்தைப் பற்றி நான் நன்கு அறிந்திருந்தேன். அதனால் முதலிலேயே நாங்கள் டாஸ் வென்றால் பந்துவீச வேண்டும் என முடிவுசெய்திருந்தோம். ஆனால் எங்கள் கேப்டன் வேறொரு முடிவை எடுத்துவிட்டார். இந்த போட்டி ஆரம்பித்த ஒரு மணிநேரத்திலேயே தோற்று விட்டோம். அதிலிருந்து மீளுவது கடினமான ஒன்று” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

வயதை குறைத்து சொல்லி ஏமாற்றினாரா வைபவ் சூர்யவன்ஷி?... தந்தை ஆவேசம்!

ஆஸ்திரேலியா தொடருக்கு நடுவே திடீரென இந்தியா திரும்பிய கம்பீர்!

ஐபிஎல் ஏலம்: வீரர்கள் தேர்வில் வித்தியாசம் காட்டிய சிஎஸ்கே - அணியை ஆட்டிப்படைக்கும் மிகப்பெரிய குறை!

அடுத்த கட்டுரையில்
Show comments