Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரில் விளையாட வீரர்கள் இன்று தேர்வு!

Webdunia
வியாழன், 31 மே 2018 (09:10 IST)
தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் வரும் ஜூலை 11ம் தேதி தொடங்க உள்ள நிலையில், இதில் பங்கேற்க உள்ள அணிகளுக்கான வீரர்களின் தேர்வு  சென்னையில் இன்று நடைபெறுகிறது
தமிழ்நாடு பிரீமியர் லீக் கடந்த 2 ஆண்டுகளாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இதன் 3வது சீசன் வரும் ஜூலை மாதம் 11ம் தேதி தொடங்கவுள்ளது.
 
இதில் நடப்பு சாம்பியன் சென்னை சேப்பாக்கம், திண்டுக்கல், தூத்துக்குடி, திருவள்ளுர், காஞ்சிபுரம் ஆகிய 8 அணிகள் கலந்துகொள்கின்றன. ஒவ்வொரு அணிக்கும் வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இதற்கான ஏலம் சென்னை கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில்  நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சிவராமகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார்.
 
இந்த வீரர்கள் தேர்வுக்காக 772 கிரிக்கெட் வீரர்கள் தங்களது பெயரை பதவி செய்து உள்ளனர். இவர்களில் சிறப்பான வீரரை 8 அணிகளின் உரிமையாளர்களும் தங்களது அணிக்காக தேர்வு செய்ய உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா இல்லைன்னா என்ன?... சாம்பியன்ஸ் கோப்பை தொடர் குறித்து கபில் தேவ் கருத்து!

தோனியின் கண்களைப் பார்த்தால் நடுங்குவோம்.. ஷிகார் தவான் பகிர்ந்த தகவல்!

கௌதம் கம்பீருக்குமா கட்டுப்பாடு… கறாராக சொன்ன பிசிசிஐ!

இலங்கையிடம் ஒருநாள் போட்டி தொடரை இழந்த ஆஸ்திரேலியா.. ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளியா?

என்னை கிங் என்று அழைக்காதீர்கள்… பாபர் ஆசம் வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments