Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-2- கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியா அணி அசத்தல் வெற்றி !

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (22:52 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலியா அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில்,  டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில் இந்திய அணி பேட்டிங் செய்ய களத்தில் இறங்கியது
இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மிக அபாரமாக விளையாடிய நிலையில், இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு 209 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது.

இன்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா மிக அபாரமாக விளையாடி 30 பந்துகளில் 71 ரன்கள் அடித்தார் என்பதும் கேஎல் ராகுல் 55 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியில்,  கேமரன் கிரீன்61 ரன்களும், மேத்யூ 45 ரன்களும்,  ஸ்டீவ் 35 ரன்களும் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினர்,

ஆஸ்திரேலியா அணி 4 பந்துகள் மீதம் இருந்த நிலையில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.

இந்தியா சார்பில், படேல் 3 விக்கெட்டுகளும், யாதவ் 2 விக்கெட்டுகளும், சாஹல் 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வெல்லும்… முன்னாள் வீரர் கணிப்பு!

மகளிர் பிரிமியர் லீக்.. பெங்களூரு அணிக்கு 2வது வெற்றி.. கேப்டன் ஸ்மிருதி மந்தனா அபார பேட்டிங்..!

துபாயில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடும் விராட் கோலி… என்ன காரணம்?

கிரிக்கெட்டர்கள் PR குழு வைத்துக் கொள்வது எவ்வளவு முக்கியம் என்று இப்போது புரிகிறது- ரஹானே ஆதங்கம்!

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments