Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டனாக களமிறங்கும் சூர்யகுமார் யாதவ்! ஆசியக்கோப்பை இந்திய அணி அறிவிப்பு!

Prasanth K
செவ்வாய், 19 ஆகஸ்ட் 2025 (15:12 IST)

துபாயில் நடைபெற உள்ள ஆசியக்கோப்பை போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

17 வது ஆசியக்கோப்பை (20 ஓவர்) போட்டிகள் செப்டம்பர் 9ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கும் இந்த போட்டிகளில் இந்தியா உட்பட 8 கிரிக்கெட் அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் சக அணிகளோடு தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும்.

 

பிரிவு ஏ-ல் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், அரபு அமீரகம் உள்ளிட்ட அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி செப்டம்பர் 14ம் தேதி நடைபெற உள்ளது.

 

இந்நிலையில் தற்போது ஆசியக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் செயல்பட உள்ளனர். 

 

ஆசியக்கோப்பை இந்திய அணி வீரர்கள்: சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்‌ஷர் படேல், ஜிதேஷ் சர்மா, ஜாஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்ஷித் ராணா

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சஞ்சு சாம்சனுக்கு பேட்டிங்கில் எந்த இடம்? குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்..!

அக்ஸர் படேல் என்ன தப்பு செஞ்சார்?... அவருக்கு விளக்கம் கொடுக்க வேண்டும் –முன்னாள் வீரர் ஆதங்கம்!

புரோ கபடி லீக் சீசன் 12: புதிய பலத்துடன் தயாராகி வருகிறது தமிழ் தலைவாஸ்..!

ஒருநாள் போட்டிகளுக்கு ஸ்ரேயாஸைக் கேப்டனாக நியமிக்க பிசிசிஐ திட்டம்?

ஜெய்ஸ்வாலும் ஸ்ரேயாஸும் சுயநலமற்ற வீரர்கள்… ஆனால் அதுதான் பிரச்சனை –அஸ்வின் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments