Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹர்திக் பாண்ட்யாவால் எனக்கு கூடுதல் அனுகூலம் கிடைத்துள்ளது.. கேப்டன் சூர்யகுமார் யாதவ் கருத்து!

Advertiesment
இந்தியா

vinoth

, வியாழன், 23 ஜனவரி 2025 (08:55 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி நேற்று கொல்கத்தாவில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணிக் கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்து வீச முடிவு செய்தார். இதன்படி பேட்டிங் ஆடவந்த இங்கிலாந்து அணியில் கேப்டன் ஜோஸ் பட்லர் தவிர மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பட்லர் 68 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க அந்த அணி 132 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இந்திய அணி சார்பில் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்களையும், அர்ஷ்தீப், ஹர்தி மற்றும் அக்ஸர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதையடுத்து 133 ரன்கள் என்ற இலக்கோடு பேட் செய்ய வந்த இந்திய அணி 13 ஆவது 3 விக்கெட்களை மட்டும் இழந்து இலக்கை எட்டி இமாலய வெற்றியைப் பெற்றது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா 34 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்து வெற்றியை உறுதி செய்தார். சிறப்பாக பந்து வீசிய வருண் சக்ரவர்த்தி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

இந்த போட்டிக்குப் பின்னர் பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் “எங்கள் பவுலர்கள் களத்தில் சிறப்பாக திட்டங்களை வகுத்து செயல்படுத்தினார்கள். ஹர்திக் பாண்ட்யா புதிய பந்தில் வீசுவதால் என்னால் கூடுதலாக ஒரு சுழல்பந்து வீச்சாளரோடு களமிறங்க முடிந்தது. கம்பீர் எங்களுக்குக் கூடுதல் சுதந்திரத்தை வழங்கியுள்ளார்.” எனப் பேசியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐசிசி தலையீட்டால் இறங்கி வந்த பிசிசிஐ… ஜெர்ஸியில் பாகிஸ்தான் பெயர் பொறிக்க சம்மதம்!