Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேதனையில் சாதனை.. இப்படி பண்ணிட்டீங்களே சூர்யகுமார்! – ரசிகர்கள் வேதனை!

Webdunia
வியாழன், 23 மார்ச் 2023 (09:12 IST)
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் போட்டிகளில் சூர்யகுமார் தொடர் தோல்வியடைந்து புதிய சாதனையை படைத்துள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து வந்தது. முன்னதாக நடந்த 2 போட்டிகளில் இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் இருந்த நிலையில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற மூன்றாவது இறுதி போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்களை குவித்தது. அடுத்ததாக களம் இறங்கிய இந்திய அணி 49 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றியது.

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான சூர்யக்குமார் யாதவ்வின் ஆட்டம் இந்த ஒருநாள் தொடரில் பெரும் ஏமாற்றமாக அமைந்தது. முதலில் நடந்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் முதல் பந்திலேயே அவுட்டாகி ஒரு ரன் கூட எடுக்காமல் வெளியேறிய சூர்யகுமார் நேற்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் முதல் பந்திலேயே அவுட்டாகி வெளியேறினார்.

இதன் மூலம் ஒரு ஒருநாள் தொடரின் மூன்று ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக முதல் பந்திலேயே அவுட்டான “கோல்டன் டக் அவுட்” முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் சூர்யக்குமார் யாதவ். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹாட்ரிக் வெற்றியை தொடுமா ஆர்சிபி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! - இன்று RCB vs GT மோதல்!

விக்கெட் எடுத்துவிட்டு சீன் போட்ட திக்வேஷ் ராதி.. தம்பி அபராதம் கட்டுங்க என குட்டு வைத்த பிசிசிஐ!

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

தொடர்ந்து சொதப்பும் பண்ட்… கேலி பொருளான சஞ்சய் கோயங்கா!

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments