3 போட்டிகளிலும் கோல்டன் டக்… சொதப்பலின் உச்சத்தில் சூர்யகுமார் யாதவ்!

Webdunia
வியாழன், 23 மார்ச் 2023 (07:12 IST)
ஆஸி அணிக்கு எதிரான தொடரின் மூன்று போட்டிகளிலும், இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் வரலாறு காணாத அளவுக்கு சொதப்பினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் அனைத்து போட்டிகளிலும் தான் சந்தித்த முதல் பந்திலேயே அவுட் ஆகி (கோல்டன் டக்) மிகப்பெரிய ஏமாற்றத்தை ரசிகர்களுக்கு அளித்துள்ளார்.

கடந்த ஆண்டு டி 20 போட்டிகளில் அசுர பார்மில் இருந்து ரன்மெஷினாக வலம் வந்த சூர்யகுமார் யாதவ் இப்படி சொதப்புவதால், அவர் டி 20 போட்டிகளுக்கு மட்டுமே ஸ்பெஷலிஸ்ட் வீரராக உள்ளாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

முன்னதாக சூர்யகுமார் யாதவ் பற்றி பேசிய பயிற்சியாளர் டிராவிட் “சூர்யகுமார் அதிகமாக ஒருநாள் போட்டிகளில் விளையாடியதில்லை. மிகவும் கடினமான டி 20 போட்டிகளிலேயே அவர் தன்னுடைய திறமையை நிரூபித்துவிட்டார். அதனால் ஒருநாள் போட்டிகளில் அவரை இன்னும் சில போட்டிகள் விளையாட வைத்து நாம் காத்திருக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அதிக சதமடித்து சாதனை: சச்சின் சாதனையை முறியடித்த விராத் கோஹ்லி..

கோஹ்லி, ருத்ராஜ் சதம் வீண்.. கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி..

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments