கடந்த சில ஆண்டுகளாக டி 20 போட்டிகளில் அசுர பார்மில் இருந்து ரன்மெஷினாக வலம் வந்த சூர்யகுமார் யாதவ். அதையடுத்து அவருக்கு ஒருநாள் போட்டிகளில் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் அவர் அந்த பார்மட்டில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இப்படி சொதப்புவதால், அவர் டி 20 போட்டிகளுக்கு மட்டுமே ஸ்பெஷலிஸ்ட் வீரராக உள்ளாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் நேற்று ஆஸி அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட நிதானமாக விளையாடி அரைசதம் அடித்து நம்பிக்கையைக் கொடுத்துள்ளார். இந்த போட்டி முடிந்த பின்னர் பேசிய அவர் “நீண்ட நாட்களாகவே இதுபோல ஒரு இன்னிங்ஸ்தான் ஆடவேண்டும் என நினைத்தேன். கடைசி வரை களத்தில் இருக்க ஆசைப்பட்டேன். ஆனால் இந்த போட்டியில் அது என்னால் முடியவில்லை.
ஒருநாள் போட்டிகளில் ஏன் என்னால் சிறப்பாக விளையாட முடியவில்லை என யோசித்தேன். அவசரப்படாமல் பொறுமையாக விளையாட வேண்டும் என கற்றுக்கொண்டேன். இந்த போட்டியில் நான் ஸ்வீப் ஷாட்கள் ஆடவே இல்லை. இதே போல தொடர்ந்து விளையாடி இந்திய அணிக்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்” எனக் கூறியுள்ளார்.