Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி வலைப்பயிற்சியில விக்கெட் எடுத்துட்டா அவ்வளவுதான்… ரெய்னா பகிர்ந்த தகவல்!

Webdunia
புதன், 28 ஜூன் 2023 (07:56 IST)
இந்திய அணிக்காக 10 ஆண்டுகள் மேல் விளையாடிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ரெய்னா பல வெற்றிகளை இந்தியாவுக்காக பெற்று தந்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக பல ஆண்டுகள் விளையாடிய சுரேஷ் ரெய்னா 2021 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.


சர்வதேச போட்டிகளில் விளையாடுவதில் இருந்து அவர் 2020 ஆம் ஆண்டே ஓய்வை அறிவித்தார். இதையடுத்து சில உள்ளூர் டி 20 லீக் போட்டிகளில் அவர் விளையாடி வந்தார். இந்நிலையில் தன்னுடன் பல ஆண்டுகள் ஒன்றாக விளையாடிய தோனி பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதில் “நான் எதிர்கொண்டதில் முரளிதரன் மற்றும் மலிங்கா ஆகியோர்தான் கடினமான பவுலர்கள். ஆனால் வலைகளில் நான் எதிர்கொண்ட கடினமான பவுலர் தோனிதான். அவர் மிகவும் தந்திரமான பந்துகளை வீசுவார். உங்கள் விக்கெட்டை ஒரு முறை எடுத்துவிட்டால் அவர் அருகிலேயே நீங்கள் செல்ல முடியாது. அதை சொல்லிக் காட்டிக் கொண்டே இருப்பார். அதே போல வலைகளில் நோ பால் வீசினாலும், அதை நியாயப்படுத்தி பேசுவார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லுங்கி இங்கிடிக்குப் பதிலாக ஜிம்பாப்வே வீரரை ஒப்பந்தம் செய்த RCB!

டீம் வெற்றிக்கு கேப்டன்தான் காரணம்.. வெளில உட்காந்திருப்பவர் அல்ல! - கம்பீரை தாக்கிய கவாஸ்கர்!

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து வெளியேற பிசிசிஐ முடிவு!

டி 20 போட்டிகளில் கோலியின் மற்றொரு சாதனையை முறியடித்த கே எல் ராகுல்!

உடல் எடையைக் குறைத்து விமர்சனங்களுக்குப் பதிலளித்த சர்பராஸ் கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments