தற்கொலைக்கு முயன்ற கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா

தற்கொலைக்கு முயன்ற கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா

வெள்ளி, 11 மார்ச் 2016 (14:31 IST)
இந்திய கிரிக்கெட் ஆல்ரவுண்டர் சுரேஷ் ரெய்னா தான் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக திடுக்கிடும் அதிர்ச்சியூட்டும் தகவலை கூறியுள்ளார்.


 
 
சுரேஷ் ரெய்னா சிறந்த இருபது ஓவர் போட்டி வீரர் என்ற பெயர் எடுத்தவர். பல கடினமான இலக்கையும் சுலபமாக அடைய உதவியவர். களத்தில் எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும் அவர் தற்கொலைக்கு முயன்றார் என்றால் பலரும் ஆச்சரியப்படுவார்கள்.
 
சுரேஷ் ரெய்னா முன்னதாக தான் விளையாட்டு வீரர்களுக்கான விடுதியில் இருந்த போது பல கடினமான சூழ்நிலைகளை சந்தித்ததாக கூறினார். மேலும் அங்கு நடந்த பல கொடுமைகளாலும் வேறு பல காரணங்களினாலும் தான் ஒருமுறை தற்கொலைக்கு முயன்றதாகவும் அவர் தெரிவித்தார்.
 
லக்னோவில் உள்ள அந்த விளையாட்டு வீரர்களுக்கான விடுதியில் தங்கி இருந்த போது பலர் என்னை சண்டைக்கு இழுத்தவாறே இருந்தனர். அந்த விடுதியில் இருந்த போது மிகவும் கஷ்டப்பட்டேன்.
 
ஒருமுறை அங்கு நடந்த சண்டையில் ஹாக்கி ஸ்டிக்கால் அடித்ததில் எனக்கு படுகாயம் ஏற்பட்டது மேலும் என்னுடைய நண்பன் ஒருவன் கோமா நிலைக்கே போய்விடான். இதனால் இந்த விடுதியே வேண்டாம் என வீட்டிற்கே சென்றுவிட்டேன். பின்னர் 2 மாதங்கள் கழித்து என்னுடைய சகோதரரின் அறிவுரையால் திரும்பவும் விளையாட்டு வீரர்களின் விடுதிக்கு வந்ததாக கூறினார்.
 
அன்று அவர் தற்கொலை செய்திருந்தால் இன்று இந்தியா இப்படி ஒரு வீரரை பெற்றிருக்குமா?. தற்கொலை என்பது கோழைத்தனம், மீண்டு வந்து போராடி நம் லட்சியத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதற்கு சுரேஷ் ரெய்னா ஒரு சிறந்து எடுத்துக்காட்டு.

வெப்துனியாவைப் படிக்கவும்