இந்திய அணியில் வீரர்களின் உடல் தகுதியை மேம்படுத்தும் விதமாக யோ யோ டெஸ்ட் உள்ளிட்ட கடுமையான சோதனைகளை பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது.
யோ யோ மற்றும் டெக்ஸ்டா உள்ளிட்ட கடினமான உடல்தகுதி தேர்வுகளில் தேர்வு பெறும் வீரர்கள் மட்டுமே அணித்தேர்வில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள். இதுபோன்ற கடினமான உடல் தகுதி தேர்வுகள் வீரர்களுக்கு தேவையில்லை என முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஊறியுள்ளார்.
மேலும் அவர் “வீரர்களில் சுழல் பந்து வீச்சாளர்களுக்கும், வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் ஒரே மாதிரியான உடல்தகுதி தேவையில்லை. அதே போல விக்கெட் கீப்பருக்கும், பேட்ஸ்மேனுக்கும் தனித்தனியான உடல் தகுதி தேவையில்லை. இதனால் கிரிக்கெட் உடல்தகுதி மட்டுமே போதுமானது” எனக் கூறியுள்ளார்.