ஐபிஎல் ஜுரம் முடிந்துள்ள நிலையில் இந்திய அணி அடுத்து இங்கிலாந்தில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடுகிறது. இதற்காக இரு அணிகளும் லண்டனில் முகாமிட்டு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்திய அணியில் மீண்டும் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் இடம்பெற்றிருப்பது கூடுதல் பலமாக இருக்கும். புஜாரா பல ஆண்டுகளாக இங்கிலாந்து கவுண்டி கிளப் மேட்ச்களில் விளையாடி வருவதால் அவரின் ஆலோசனைகள் இந்திய அணிக்கு கூடுதல் பலன்களை அளிக்கும் என முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பேசியுள்ள அவர் “புஜாரா சக்ஸெஸ் அணிக்காக பல போட்டிகளை விளையாடியுள்ளார். இங்குள்ள கல நிலவரங்கள் அவருக்கு நன்றாக தெரியும். அவரின் ஆலோசனைகள் இந்திய அணிக்குப் பலனளிக்கும். இப்போதுதான் இந்திய வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்துள்ளனர். அதனால் அவர்கள் தங்கள் வேகத்தைக் குறைத்துக் கொண்டு விளையாட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.