Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அகராதியில் இருந்து அந்த வார்த்தையை நீக்குங்கள்… இந்திய அணிக்கு கவாஸ்கர் அட்வைஸ்!

Webdunia
சனி, 30 டிசம்பர் 2023 (07:41 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த தோல்வி குறித்து பேசிய கேப்டன் ரோஹித் ஷர்மா “இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் தகுதியே ஒரு அணியாக நாங்கள் பெறவில்லை. பேட்டிங்கில் கே எல் ராகுல் மட்டும்தான் சிறப்பாக விளையாடினார். பவுலர்கள் மைதானத்தை சரியாக பயன்படுத்தவில்லை.  ஒரு டெஸ்ட் போட்டியை வெல்ல நீங்கள் ஒரு அணியாக இணைந்து வெல்ல வேண்டும். இந்த மைதானம் பவுண்டரி அடித்து விளையாடக் கூடியதாக இருந்தது. அவர்கள் எப்படி விளையாடினார்கள் என்பதை பார்த்தாலே தெரியும். இன்னிங்ஸ்களிலும் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை. அதனால் தோல்வி அடைந்தோம்” எனக் கூறியுள்ளார்.

இந்த தோல்வி குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் “இந்திய அணி தங்களுக்குள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவதற்கு பதில் மற்ற அணிகளுக்கு எதிராக விளையாடவேண்டும். தங்களுக்குள் விளையாடினால் வீரர்கள் தங்கள் முழு திறனையும் வெளிப்படுத்த மாட்டார்கள். அதே போல இந்திய அணியின் அகராதியில் இருந்து வேலைப்பளு என்ற வார்த்தையை நீக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, கோஹ்லி மட்டுமல்ல, பும்ராவும் இல்லை.. இங்கிலாந்து செல்லும் இந்திய அணியின் கேப்டன் யார்?

ஓய்வு என்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவு… யாரும் ஒன்றும் செய்ய முடியாது – கம்பீர் விளக்கம்!

அடுத்தடுத்து வரும் நற்செய்திகள்… ஆர் சி பி அணியில் இணையும் வெளிநாட்டு வீரர்!

டெஸ்ட் அணியில் கோலியின் இடத்தைக் கைப்பற்றும் ஷுப்மன் கில்?

RCB அணிக்கு மகிழ்ச்சியான செய்தி… அணிக்குள் வரும் முக்கிய வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments