Publish Date: Thu, 21 Mar 2024 (07:01 IST)
Updated Date: Thu, 21 Mar 2024 (07:07 IST)
தற்கால கிரிக்கெட் வீரர்களில் மிகச்சிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டராக இருப்பவர் ஸ்டீவ் ஸ்மித். டெஸ்ட் போட்டிகளில் அவர் 60க்கும் மேல் சராசரியை வைத்துள்ளார்.பிராட்மேனுக்கு அடுத்து அதிக சராசரி கொண்ட கிரிக்கெட் வீரராக உள்ளார்.
டெஸ்ட் தொடரை போலவே அவர் ஒருநாள் மற்றும் டி 20 கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனால் அவரை கடந்த ஆண்டு இறுதியில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் எடுக்கவில்லை. இது கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இப்போது ஸ்டீவ் ஸ்மித் ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக பணியாற்ற முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அவர் ஆங்கில வர்ணனையாளர் குழுவில் பணியாற்ற உள்ளதாக சொல்லப்படுகிறது.