Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறோம், ஆனால்…?”- தோல்விக்குப் பிறகு ஸ்டீவ் ஸ்மித் சொன்ன காரணம்!

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2023 (09:02 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று இந்தூர் மைதானத்தில் நடந்தது. இதில் இந்திய அணி முதலில் பேட் செய்ய தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில்லும், மூன்றாவதாக இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயரும் சிறப்பாக விளையாடி சதமடித்தனர். இதன் மூலம் இந்திய அணி 399 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.

இதன் பின்னர் ஆடிய ஆஸி அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. மழைக் காரணமாக போட்டி 33 ஓவருக்கு குறைக்கப்பட்டு 317 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த தோல்வியின் மூலம் தொடர்ந்து 5 ஒருநாள் போட்டிகளில் தோற்று சொதப்பியுள்ளது ஆஸி அணி.

இந்த தோல்விக்குப் பிறகு பேசிய ஆஸி. அணியின் தற்காலிக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் “இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு ஒத்துழைப்பது போலவே பவுலர்களும் ஆதிக்கம் செலுத்தலாம் என நினைத்தோம். ஆனால் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடினர். அதன் பிறகு ஆடிய ராகுல் மற்றும் சூர்யகுமாரின் ஆட்டம் பிரமிக்க வைக்கும் விதமாக இருந்தது.

எங்கள் பேட்டிங்கின் போது மழைக் குறுக்கிட்டு, அதன் பிறகு மைதானம் மாறிவிட்டது. நாங்கள் தென்னாப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் தொடர்ந்து தோற்று வருகிறோம். ஆனால் உலகக் கோப்பைக்குள் ஒரு சரியான அணியைக் கண்டுபிடித்து விடுவோம் என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

பும்ரா இல்லைன்னா என்ன?... சாம்பியன்ஸ் கோப்பை தொடர் குறித்து கபில் தேவ் கருத்து!

தோனியின் கண்களைப் பார்த்தால் நடுங்குவோம்.. ஷிகார் தவான் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments