Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓவல் மைதானத்தில் இவர்களை எதிர்கொள்வதுதான் சவாலாக இருக்கும்… ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

Webdunia
வெள்ளி, 2 ஜூன் 2023 (14:15 IST)
இங்கிலாந்தில் நடக்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தயாராகி வருகின்றன. இரு அணி வீரர்களும் லண்டனில் முகாமிட்டு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆஸி அணியின் டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸ் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அணியில் இணைந்துள்ளார். இதனால் அந்த அணிக்குக் கூடுதல் பலம் கிடைத்துள்ளது. 7 ஆம் தேதி தொடங்கவுள்ள போட்டி பற்றி ஆஸி அணியின் துணைக் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேசியுள்ளார்.

அதில் “ஓவல் மைதானத்தில் சுழல் பந்து வீச்சாளர்களால் தாக்கத்தை உருவாக்க முடியும். அதனால் இந்தியாவின் ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோரின் பந்துகளை எதிர்கொள்வது சவாலாக இருக்கும்.” எனக் கூறியுள்ளார். ஆஸி அணிக்கு எதிராக இவ்விருவரும் மிகச்சிறப்பாக பந்து வீசி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவர் இருப்பதால் கோலி அழுத்தமில்லாமல் விளையாடலாம்- டிவில்லியர்ஸ் கருத்து!

மும்பை இந்தியன்ஸ் அணிக்குக் கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்..!

15 நிமிடங்களில் விற்று தீர்ந்த சிஎஸ்கே போட்டிக்கான டிக்கெட்: ரசிகர்கள் ஏமாற்றம்..!

Watch: நீ பொட்டு வெச்ச தங்கக்குடம்.. பயிற்சி ஆட்டத்தில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்த தல தோனி!

கொல்கத்தாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி இடமாற்றமா? என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments