Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதற்றமான சூழலை சமாளிக்க தோனியை தேடி சென்று அறிவுரை பெற்ற ஸ்மித்! (வீடியோ இணைப்பு)

பதற்றமான சூழலை சமாளிக்க தோனியை தேடி சென்று அறிவுரை பெற்ற ஸ்மித்! (வீடியோ இணைப்பு)

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2017 (16:38 IST)
10-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த 9 தொடர்களிலும் அணியின் கேப்டனாக களம் இறங்கிய தோனி இந்த தொடரில் முதன் முறையாக கேப்டன் பதவி இல்லாமல் சாதாரண விக்கெட் கீப்பர் பேட்ஸ் மேனாக களம் இறங்கினார்.


 
 
இது தோனியின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தோனியின் கேப்டன்ஷிப் அந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக பதற்றமான சூழலில் அணியை கூலாக வழிநடத்தி செல்வார். இதற்காக அவரை கேப்டன் கூல் என்று கூட அழைப்பார்கள்.
 
இந்நிலையில் புனே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி நீக்கப்பட்டு ஆஸ்திரேலியாவின் ஸ்மித் நியமிக்கப்பட்டார். தொடக்கத்தில் தடுமாறிய புனே தோனியின் திடீர் எழுச்சி போல அணியும் எழுச்சி பெற்றது. தொடர்ந்து மூன்றாவது வெற்றியாக மும்பை அணியை நேற்று முன்தினம் வீழ்த்தியது பூனே அணி.
 
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் புனே அணி 3 ரன் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி திரில் வெற்றியை ருசித்தது. ரோகித் ஷர்மா, ஹர்திக் பாண்டிய ஆகிய மும்பையின் அதிரடி பேட்ஸ் மேன்கள் களத்தில் இருக்க புனே அணி வெற்றி பெறுமா என்ற பதற்றம் நிலவி வந்தது.

 
19-வது ஓவரை பென் ஸ்டோக்ஸ் அருமையாக வீச பதற்றக் மேலும் தொற்றிக்கொண்டது. கடைசி ஓவரில் புனே அணிக்கு 17 ரன் தான் தேவைப்பட்டது. களத்தில் ரோஹித் ஷர்மா, ஹர்திக் ஷர்மா நிற்க மைதானம் ஆர்ப்பரித்தது. பதற்றம் நிரம்பி வழிந்தது இரு அணியினருக்கும்
 
இந்த சூழலில் கேப்டன் கூல் என கூறப்படும் தோனியை தேடி சென்று அறிவுரை பெற்றார் புனே கேப்டன் ஸ்மித். இதனையடுத்து வீசப்பட்ட கடைசி ஓவரில் புனே அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மைதானத்தில் அதிக முறை தோல்வி அடைந்த சீசன்.. சிஎஸ்கேவின் மோசமான சாதனை..!

எதிர்காலத்தில் சிஎஸ்கே அணியின் சொத்தாக அவர் இருப்பார்… இளம் வீரரைப் பாராட்டிய தோனி!

ஓய்வை அறிவிக்கப் போகிறாரா தோனி?... நேற்றைய போட்டியில் சூசக தகவல்!

உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் விட்ட’டூரிஸ்ட் பேமிலி’ பட இயக்குனர்!

போட்டியின் போக்கையே மாற்றிய சஹாலின் ஒரு ஓவர்…!

அடுத்த கட்டுரையில்
Show comments