Publish Date: Thu, 21 Mar 2024 (14:40 IST)
Updated Date: Thu, 21 Mar 2024 (15:00 IST)
ஜூன் மாதத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி 20 உலகக் கோப்பை தொடர் நடக்க உள்ளது. முதல் முதலாக இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன. உலகக் கோப்பை தொடர் ஒன்றில் இவ்வளவு அதிக அணிகள் கலந்துகொள்வது இதுவே முதல்முறை.இந்த தொடருக்கான ஏ பிரிவில் இந்தியா பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் இந்த டி 20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலியை அணியில் எடுக்காமல் இருக்க பிசிசிஐ தேர்வுக்குழு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. வெஸ்ட் இண்டீஸில் உள்ள பிட்ச்களின் தன்மை கோலியின் பேட்டிங் பாணிக்கு சரிவராது என்பதால் அவருக்கு பதில் இளம் வீரர் ஒருவரை அணியில் எடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு ரசிகர்கள் கடுமையாக எதிர்வினையாற்றினர்.
இதையடுத்து கிரிக்கெட் வீரர்களும் கோலிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஸ்டீவ் ஸ்மித் “கோலி சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவார். அதுபோல நீங்கள் விளையாடும் போது ஸ்ட்ரைக் ரேட்டை எல்லாம் பார்க்கக் கூடாது. விராட் கோலி ஆர் சி பி கோ, இந்திய அணிக்காகவோ சில மாஸ்டர் கிளாஸ் இன்னிங்ஸை விளையாடுவதை நாம் பார்த்துள்ளோம். நான் அவருக்கு எதிராக விளையாடிய போட்டிகளில் எங்களிடம் இருந்து போட்டியை அவர் பறித்து சென்றுள்ளார்” எனக் கூறியுள்ளார்.