ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி நடந்து வரும் நிலையில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் இலங்கை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. இன்று இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை அணி வங்கதேச அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாற்றம் கண்டுள்ளது.
வங்க தேசத்தின் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் நயீம், தன்ஷிட் ஹசன் விக்கெட்டுகள் ஆரம்பத்திலேயே காலியான நிலையில் நஜ்முல் ஹுசைன் மட்டும் நின்று விளையாடி 89 ரன்களில் அவுட் ஆனார். அதன்பின்னர் வந்தவர்களாலும் இலங்கை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியவில்லை.
அதிகபட்சமாக இலங்கை அணி பந்துவீச்சாளர் பதிரணா 4 விக்கெட்டுகளையும், தீக்ஷணா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 42 ஓவர்கள் முடிவில் வெறும் 164 ரன்களில் அனைத்து விக்கெட்டையும் வங்கதேசம் இழந்தது. இந்த இலக்கு இலங்கைக்கு எளிய இலக்கு. வங்கதேசம் தனது பவுலிங்கில் ஸ்கோர் செய்ய வேண்டிய நெருக்கடியில் உள்ளது.