Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையை ஒயிட் வாஷ் செய்த இந்தியா: மூன்றாவது டெஸ்டிலும் வெற்றி!

இலங்கையை ஒயிட் வாஷ் செய்த இந்தியா: மூன்றாவது டெஸ்டிலும் வெற்றி!

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (15:13 IST)
இந்தியா இலங்கை அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று அந்த அணியை ஒயிட் வாஷ் செய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.


 
 
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியுள்ள நிலையில் மூன்றாவது போட்டியில் இலங்கையை சந்தித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 487 ரன் குவித்தது.
 
இந்தியா தரப்பில் தவான் 119 ரன்களும் ஹர்திக் பாண்டியா அதிரடியாக108 ரன்னும் அடித்தனர். ராகுல் 85 ரன்னும் கேப்டன் கோலி 42 ரன்னும் குவித்தனர். இதனையடுத்து களம் இறங்கிய இலங்கை அணியால் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியவில்லை. கேப்டன் சண்டிமால் மட்டும் 48 ரன் அடித்தார் மற்ற அனைவரும் சொற்ப ரன்னிலே வெளியேறி 135 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இலங்கை. இதன் மூலம் இலங்கை ஃபலோ ஆன் ஆனது.
 
இந்தியா தரப்பில் குல்தீப் யதவ் 4 விக்கெட்டுகளையும் ஷமி, அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனையடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 181 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 171 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
திக்வெலா 41 ரன்னும் சண்டிமால் 36, மேத்யூஸ் 35 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் அஷ்வின் 4 விக்கெட்டுகளும் ஷமி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் இந்தியா இலங்கையை ஒயிட் வாஷ் செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துப்பாக்கிய பிடிங்க வாஷி… உங்க பேச்சுதான் பெஸ்ட்டு… அஸ்வின் நெகிழ்ச்சி!

கோலி மட்டும் கேப்டனாக இருந்தால் அஸ்வினை விட்டிருக்க மாட்டார்… பாகிஸ்தான் வீரர் கருத்து!

25 வருடத்துக்கு முன்பு யாராவது இதை சொல்லியிருந்தால்..?- அஸ்வின் நெகிழ்ச்சி!

சச்சின், கவாஸ்கருக்கு நிகரானவர் அஸ்வின்… கபில் தேவ் ஆதங்கம்!

ஸ்மிருதி மந்தனா அபாரம்.. மே.இ.தீவுகளுக்கு எதிராக தொடரை கைப்பற்றிய இந்திய அணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments