Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயர்லாந்து அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்ற ஸ்ரீலங்கா

Webdunia
வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (20:54 IST)
இலங்கை அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வந்த நிலையில்  தொடரை வென்றுள்ளது இலங்கை அணி.

இலங்கை அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2 வது மற்றும் கடைசி டெஸ்ட் இன்று  காலேயில் நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 492  ரன்கள் எடுத்தது.  பின்னட் ஆடிய இலங்கை அணி தன் முதல் இன்னிங்ஸில் 11 ஓவர்களளில் 3 விக்கெட் இழப்பிற்கு 704  ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

 இதில், மதுஷ்கா, குசால் ஆகியோர் இரட்டை சதம் அடித்தனர்.

இதையடுத்து, 212 ரன்கள் பின்தங்கிய நிலையில் அயர்லாந்து 2 வது இன்னிஸ்ங்கில் விளையாடியது. ஆனால், 4 வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு   54  ரன்கள் எடுத்தது.

இன்று நடைபெற்ற கடைசி நாள் ஆட்டத்தில் அயர்லாந்து அனைத்து விக்கெட்டுகளும் இழந்து பால் ஸ்டிர்லிங் 1 ரன், லோர்கடன் டக்கர் 13 ரன்களுடன் ஆட்டமிழந்தனர். எனவே 77.3 ஓவர்களில் 202 ரன்களுக்கு அயர்லாந்து ஆட்டமிழந்தது.

இலங்கை அணியில் ரமேஷ் மெண்டிஸ் 5 விக்கெட்டும், பெர்ன்னாண்டோ 3 விக்கெட்டும் கைப்பற்றினர். எனவே இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, விராத் கோஹ்லியை அடுத்து இன்னொரு ஜாம்பவனும் ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.. சூர்யகுமார் யாதவுக்கு ஸ்பெஷல் பாராட்டு..!

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எத்தனை கோடி பரிசு? தெ.ஆப்பிரிக்க அணிக்கு எவ்வளவு?

சர்வதேச டி20 கிரிக்கெட்: உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றார் ரோகித் சர்மா

இதுதான் சரியான நேரம்.. ஓய்வை அறிவித்த விராட் கோலி! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments