Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர்… பெங்களூர் அணியின் 11 ஆண்டுகால சாதனையை முறியத்த ஐதராபாத்!

vinoth
புதன், 27 மார்ச் 2024 (21:47 IST)
மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையில் இன்று நடந்து வரும் போட்டி ஐபிஎல் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய ஐதராபாத் அணி ஆரம்பம் முதலே அதிரடியில் புகுந்து மும்பை இந்தியன்ஸ் பவுலர்களை நடுங்க வைத்தனர்.

அந்த அணியின் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா மற்றும் ஹென்ரிச் கிளாசன் ஆகியோரின் அதிரடியால் 3 விக்கெட்களை இழந்து 277 ரன்கள் சேர்த்தது. இந்த ஸ்கோர் ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.  மும்பை போன்ற வலுவான பவுலர்களைக் கொண்ட ஒரு அணிக்கு எதிராக சன் ரைசர்ஸ் இந்த சாதனையைப் படைத்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் வாய் பிளக்க வைத்துள்ளது.

இதற்கு முன்பு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புனே வாரியரஸ் அணிக்கு எதிராக 263 ரன்கள் சேர்த்திருந்ததே இதுவரையிலான சாதனையாக இருந்தது. 11 வருட அந்த சாதனையை தற்போது சன் ரைசர்ஸ் அணி முறியடித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மண்ணில் விளையாடுவதால் அழுத்தம் இருக்கும்… ஆஸி கேப்டன் பேட் கம்மின்ஸ் பதில்!

முதல் டெஸ்ட்டில் நிதீஷ் குமாருக்கு வாய்ப்பு… பவுலிங் பயிற்சியாளர் பகிர்ந்த தகவல்!

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: 3-வது முறையாக சாம்பியன் ஆனது இந்தியா..!

கோலியைக் கொண்டாடும் ஆஸி ஊடகங்கள்.. ஆனால் உளவியல் ரீதியாகத் தாக்கும் ஆஸி வீரர்கள்…!

அவர் இருந்திருந்தா நாங்க எல்லாம் களைப்பாகிவிடுவோம்… இந்திய வீரர் குறித்து நிம்மதி பெருமூச்சு விட்ட ஆஸி பவுலர்!

அடுத்த கட்டுரையில்
Show comments