Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தரம்ஷாலாவில் இருக்கும் கிரிக்கெட் வீரர்களை அழைத்துவர சிறப்பு ரயில் ஏற்பாடு!

vinoth
வெள்ளி, 9 மே 2025 (08:29 IST)
பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்திய முப்படை பாகிஸ்தானின் 9 இடங்களில் குறிவைத்துத் தாக்கியது. தீவிரவாதிகள் முகாமைதான் தாக்கினோம் என்று இந்தியா சார்பில் சொல்லப்பட்டாலும், மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகள் தாக்குதல் நடத்தியதாகக் குற்றச்சாட்டை வைத்தது.

இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் பதில் தாக்குதல் நடத்த, இந்திய ராணுவமும் தற்போது பாகிஸ்தானின் லாகூர் மற்றும் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் ஆகிய பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளிலும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

இதன் காரணமாக இமாச்சலப் பிரதேசத்தில் தரம்ஷாலா மைதானத்தில் நேற்று நடந்த பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி பாதியிலேயேக் கைவிடப்பட்டது. எஞ்சிய ஐபிஎல் தொடரும் தள்ளிவைக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. எல்லைப் பகுதிகளில் உள்ள விமான சேவைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில் தற்போது தரம்ஷாலாவில் இருக்கும் இரு அணி வீரர்கள் மற்றும் குழுவினரை அழைத்துவர சிறப்பு வந்தே பாரத் ரயில் ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடிபொலி.. கேரளாவுக்கு வரும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி! - கொண்டாட்டத்தில் சேட்டன்ஸ்!

தேர்வுக்குழு மீட்டிங்கை பிசிசிஐ நேரலை செய்ய வேண்டும்: மனோஜ் திவாரி கோரிக்கை..!

மகளிர் உலகக் கோப்பை… பெங்களூருவில் இருந்து நவி மும்பைக்கு மாற்றம்!

சஞ்சு சாம்சனுக்கு பேட்டிங்கில் எந்த இடம்? குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்..!

அக்ஸர் படேல் என்ன தப்பு செஞ்சார்?... அவருக்கு விளக்கம் கொடுக்க வேண்டும் –முன்னாள் வீரர் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments